மலேசிய இராணுவப்படையில் குறிப்பாக தரைப்படையில் பூமிபுத்ராக்கள் அல்லாதவரகள் அதிகளவில் சேர வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோ செரி முகமட் ஹஸ்சான் கேட்டுக்கொண்டுள்ளார். பூமிபுத்ரா அல்லாதவர்களை ஆயுதப்படையில் சேர்ப்பதற்கு பல்வேறு ஊக்குவிப்பு பிரச்சாரத்தை தற்காப்பு அமைச்சு மேற்கொண்ட போதிலும் அப்படையில் உள்ள பூமிபுத்ரா அல்லாதவர்களின் எண்ணிக்கை இன்னமும் 3 விழுக்காட்டிற்கும் குறைவாகவே உள்ளது என்று முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசிய தற்காப்புப்படையில் பூமிபுத்ரா அல்லாதவர்கள் அதிகளவில் இணைவதை ஊக்குவிக்க பெற்றோர்களும், அரசாங்க சார்பற்ற அமைப்புகளும் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, இராணுவப்படையில் இணைவதற்கான அவசியத்தை இளைய தலைமுறையினருக்கு உணர்த்த வேண்டும். இராணுவப்படையில் பூமிபுத்ரா அல்லாதவர்களின் எண்ணிக்கை குறைந்த பட்சம் பத்து விழுக்காட்டை பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும். அதற்காகவே தற்காப்பு அமைச்சு தொடர்ந்து பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாக முகமட் ஹசான் குறிப்பிட்டார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு


