May 6, 2026
Thisaigal NewsYouTube
ரயில் நிலையங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை – வங்காள தேச ஆடவர் மீது  குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

ரயில் நிலையங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை – வங்காள தேச ஆடவர் மீது குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூரில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களில், ஐந்து பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக 41 வயதுடைய வங்காளதேச ஆடவர் மீது இன்று கோலாலம்பூர், நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டதாக மாநகர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபடில் மார்சஸ் தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை காலை கோலாலம்பூர், மலூரி எல்ஆர்டி நிலையத்தில் இந்த அந்நிய நாட்டு ஆடவரைக் போலீஸ் கைது செய்ததாக அவர் குறிப்பிட்டார். சம்பந்தப்பட்ட ஆடவர் 21 முதல் 28 வயதுடைய பெண்களுக்கு, சான் சோவ் லின் எல்ஆர்டி நிலையம், மலூரி, தாமான் மிடா எல்ஆர்டி நிலையங்களில் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

குற்றவியல் சட்டம் 354 ஆவது பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த ஆடவர், குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டு சிறை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று டத்தோ ஃபடில் மார்சஸ் குறிப்பிட்டார்.

Related News