Mar 30, 2026
Thisaigal NewsYouTube
போலீசாரைத் தாக்கியதாக  8 பேர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

போலீசாரைத் தாக்கியதாக 8 பேர் மீது குற்றச்சாட்டு

Share:

பினாங்கு, சுங்கை பினாங்கு பகுதியில் உள்ள PPR குடியிருப்பு பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற மோதலில், பணியிலிருந்த மூன்று போலீஸ்காரர்களை காயப்படுத்தியதாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேர், தங்களின் குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினர்.

26 முதல் 38 வயதுக்குட்பட்ட இந்த எட்டு பேரும், கடந்த மார்ச் 25-ஆம் தேதி இரவு 9:50 மணியளவில் லான்ஸ் கோப்ரல் மற்றும் கான்ஸ்டபிள் தர வரிசையிலான மூன்று அதிகாரிகளைத் தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டனர்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்க செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் எண்மரும் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

Related News