அலோர் ஸ்தார், பாலிங் - கில் நேற்று பெய்த அடைமழையினால் மூன்று கிராமங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
கம்போங் இபோய், கம்போன் சாடெக், கம்போங் பாடாங் ஆகிய மூன்று கிராமங்கள் கனத்த மழையில் பாதிக்கப்பட்டுள்ளதாக பாலிங் மாவட்ட குடிமை தற்காப்பு தலைவர் முஹமாட் ஃபைசோல் எபி அசிஸ் தெரிவித்தார்.
தொடர்ந்து பெய்த அடைமழையினால் சுங்ஙை பாலிங் அருகிலுள்ள வீடுகள் அனைத்திலும் வெள்ளம் புகுந்ததாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இப்பொழுது வெள்ளம் ஓரளவு குறைந்திருந்தாலும் பாலிங் - கில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் மக்கள் அனைவரையும் பாதுகாப்பாக இருக்குமாறு முஹமாட் ஃபைசோல் கேட்டுக் கொண்டார்.








