சட்டவிரோத கேளிக்கை மையங்களின் நடத்துநர்களிடமிருந்து லஞ்சம் பெற்று வந்தது தொடர்பில் பகாங் மாநிலத்தில், மாவட்ட போலீஸ் தலைவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். கைது செய்துள்ளது.
லைசென்ஸின்றி செயல்பட்டு வந்த கேளிக்கை மையங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு பத்து லட்சம் வெள்ளி வரை அந்த மாவட்ட போலீஸ் தலைவர் கையூட்டு பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
53 வயதான அந்த மாவட்ட போலீஸ் தலைவர் கடந்த 2017 முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் பத்து லட்சம் வெள்ளியை பெற்றுள்ளதாக எஸ்.பி.ஆர்.எம். விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related News

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு


