கோலாலம்பூர், நவம்பர்.12-
சபா மாநிலத்திற்கு 40 விழுக்காடு வருவாய் திருப்பித் தரப்பட வேண்டும் என்ற கோத்தா கினபாலு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த விரிவான விளக்கம் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
தீர்ப்பின் சில முக்கிய அம்சங்களை எதிர்த்து அரசாங்கம் மேல்முறையீடு செய்யாமல் இருப்பதற்கான காரணத்தையும், சில அம்சங்களுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப் போவது குறித்தும் நாளை விளக்கமளிக்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அன்வார், ஒவ்வொரு அமைச்சரும் நீண்ட நேரம் யோசித்த பிறகு தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று கடந்த செவ்வாய்க்கிழமை, மத்திய அரசாங்கம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.








