குவாந்தான், டிசம்பர்.24-
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு போலி பத்திரங்களைப் பயன்படுத்தி மோசடி செய்த குற்றத்திற்காக தேசிய கலை, கலாச்சார இலாகாவின் முன்னாள் இயக்குநர் மற்றும் கலை ஆர்வலர் ஆகிய இரு பெண்களுக்கு குவாந்தான் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 6 மாதச் சிறையும் 10 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் விதித்தது.
40 வயது டாயாங் கார்த்தினி அவாங் புஜாங் என்ற முன்னாள் இயக்குநரும், 39 வயது மார்ட்ஸியாரா சே முகமட் அமீன் என்ற கலை ஆர்வலரும் தங்களுக்கான அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதச் சிறைத் தண்டனையை விதிப்பதாக நீதிபதி சாஸ்லின் ஷாஃபி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
தாங்கள் சார்ந்த இலாகாவில் அனாஸ் நியாகா என்ற நிறுவனத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லை என்ற போதிலும் அந்த நிறுவனத்தின் பெயரில் 9 ஆயிரத்து 920 ரிங்கிட்டைக் கோருவதற்குப் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்ததாக இருவர் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.








