Oct 16, 2026
Thisaigal NewsYouTube

ஒழுங்கீன நடவடிக்கை :189 பேர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஒழுங்கீன நடவடிக்கை :189 பேர் கைது

ஜோகூர்பாரு,டிச.9-


ஜோகூர்பாரு மற்றும் இஸ்கண்டார் புத்ரிi ஆகிய பகுதிகளில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு எதிராக போலீசார் மேற்கொண்ட ஓப் நோடா காஸ் சிறப்பு சோதனை நடவடிக்கையில் 177 வெளிநாட்டவர்கள் உட்பட 189 பேர் கைது செய்யப்பட்டனர் என்று ஜோகூர் போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

விபச்சாரம், ஜிஆர்ஓ. சேவை, குண்டர் கும்பல் நடவடிக்கை ஆகியவற்றை இலக்காக கொண்டு 14 போலீஸ் அதிகாரிகளும், 54 இளம்நிலை அதிகாரிகளும் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

6 வர்த்தகத் தலங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் 11 உள்ளூர்வாசிகள் உட்பட 18 க்கும் 63 க்கும் இடைப்பட்ட வயதுடைய 189 பேர் கைது செய்யப்பட்டதாக டத்தோ குமார் தெரிவித்தார்.

இந்த சோதனையில் 16 உள்ளூர் ஆடவர்களும், 12 வெளிநாட்டுப் பெண்களும் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது சிறுநீர் பரிசோதனையில் தெரியவந்துள்ளது என்று டத்தோ குமார் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →