Jun 30, 2026
Thisaigal NewsYouTube
வேர்களைத் தேடி ஒரு பயணம்: இந்தாணின் நெகிழ்ச்சிக் கதை
தற்போதைய செய்திகள்

வேர்களைத் தேடி ஒரு பயணம்: இந்தாணின் நெகிழ்ச்சிக் கதை

Share:

கோலாலம்பூரின் ஆடம்பர வாழ்க்கை, மெர்சிடிஸ் பென்ஸ் கார், கைநிறைய சம்பளம் - இவை அனைத்தையும் உதறிவிட்டு, 400 கி.மீ தொலைவிலுள்ள கிளந்தான் கிராமத்திற்கு ஒரு தம்பதி இடம்பெயர்ந்த கதை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

39 வயதான இந்தான் சியாஸ்லின் மற்றும் அவரது கணவர் ஃபிர்தாஸ், 2019-இல் தந்தையின் மறைவுக்குப் பின் தனிமையில் வாடிய தாயாரைப் பராமரிக்கவே இந்தத் துணிச்சலான முடிவை எடுத்தனர். "வீட்டிற்குள் பாம்பு வந்தபோது கூட யாரிடம் சொல்வதென்று தெரியாமல் என் மாமியார் தவித்த செய்தி, எங்களை உலுக்கியது" என்கிறார் இந்தான்.

தங்கள் சொகுசு வாழ்வைச் சுருக்கிக்கொண்டு, கடனில்லா எளிய வாழ்க்கையைத் தொடங்கிய இவர்களுக்கு, இன்று கோழிகளும் வாத்துகளும் நிறைந்த தோட்டமே உலகம். "வெற்றியை வசதிகளால் அளவிடுவதை விட, அன்புக்குரியவர்களுக்காக நாம் எடுக்கும் முடிவுகளே உண்மையான வெற்றி" என்று இந்தான் நெகிழ்கிறார்.

"பெற்றோருக்குத் தேவை பண்டிகை காலத்து வருகை மட்டுமல்ல; நம்முடைய நேரமும் அக்கறையும்தான். இந்த ராயா விடுமுறையில் சொந்த ஊருக்குச் சென்றவர்கள், உங்கள் பெற்றோருடன் இன்னும் சற்று கூடுதல் நேரம் செலவிடுங்கள்" என்பதே அவர் உலகிற்குச் சொல்லும் அழகான செய்தி.

Related News

கோவிட் தடுப்பூசிக்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடி: கூட்டரசு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கோவிட் தடுப்பூசிக்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடி: கூட்டரசு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

இணைய மோசடிகள் தொடர்பாக 1.65 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு ; 45,000 பேர் கைது

இணைய மோசடிகள் தொடர்பாக 1.65 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு ; 45,000 பேர் கைது

சரவாக் மாநிலத்திற்கான சிறப்பு மானியம் உயர்த்தப்படும் - அன்வார் அறிவிப்பு

சரவாக் மாநிலத்திற்கான சிறப்பு மானியம் உயர்த்தப்படும் - அன்வார் அறிவிப்பு

புத்ராஜெயா நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு இல்லை / பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக அன்வார் தகவல்

புத்ராஜெயா நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு இல்லை / பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக அன்வார் தகவல்

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு: இ-ஹெய்லிங் ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு: இ-ஹெய்லிங் ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

சையத் சித்திக் மீதான வழக்கில் ஜூலை 13-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு

சையத் சித்திக் மீதான வழக்கில் ஜூலை 13-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு