ஜாசின், செப்டம்பர்.02-
தனது 15 வயது வளர்ப்பு மகளை மானபங்கம் செய்ததாக நம்பப்படும் சிங்கப்பூர் பிரஜை ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். மாஜிஸ்திரேட் மஸானா சினின் முன்னிலையில் நிறுத்தப்பட்ட 56 வயது மதிக்கத்தக்க அந்த நபரை, விசாரணைக்கு ஏதுவாக 5 நாள் தடுத்து வைக்கப்படுவதற்கான அனுமதியைப் போலீசார் பெற்றனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜுன் 27 ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் மலாக்கா, ஜாசின், கம்போங் ஆயர் பாருக் என்ற இடத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கும், அவரின் சகோதரிக்கும் இடையில் வாக்குவாதம் நிகழ்ந்த போது, அந்த சிங்கப்பூர் பிரஜை முறை தவறி நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஐந்து உடன்பிறப்புகளைக் கொண்ட அந்த 15 வயது பெண், நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் ஜாசின் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.








