May 24, 2026
Thisaigal NewsYouTube
e- hailing ஓட்டுநர், சாலைத்தடுப்பில் மோதி உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

e- hailing ஓட்டுநர், சாலைத்தடுப்பில் மோதி உயிரிழந்தார்

Share:

பெந்தொங் , ஆகஸ்ட் 26-

வேககட்டுப்பாட்டை இழந்த e-hailing வாகன ஓட்டுநர் ஒருவர், சாலைத் தடுப்பை மோதி, கார் தடம்புரண்டதில் சம்பவ இடத்திலேயே மாண்டார்.

இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் ஜாலான் கெந்திங் ஹைலேண்ட்ஸ் சாலையின் 15.8 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.

ஹான் ஹூக் சீ என்று அடையாளம் கூறப்பட்ட 68 வயதுடைய அந்த வாகன ஓட்டுநர் தலையிலும், உடலிலும் கடும் காயங்களுக்கு ஆளானதாக பெந்தொங் மாவட்ட போலீஸ் தலைவர் ஹான் ஹூக் சீ தெரிவித்தார்.

அவரின் காரில் பயணித்த உள்ளூரை சேர்ந்த 70 வயது மூதாட்டி எவ்வித காயங்களின்றி உயிர் தப்பியதாக அவர் மேலும் கூறினார்.

அந்த கார், பயணியை ஏற்றிக்கொண்டு கெந்திங் ஹைலண்ட்ஸிருந்து கிள்ளானை நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News