Oct 18, 2026
Thisaigal NewsYouTube

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் பார்வையிட்டார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் பார்வையிட்டார்

அலோர் ஸ்டார்,செப்டம்பர் 21-

கெடா மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நேரில் சென்று நடப்பு நிலவரத்தை பார்வையிட்டதுடன் மூன்று நிவாரண மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள மக்களையும் சந்தித்தார்.

கோலாலம்பூரிலிருந்து பிரதமர் சென்ற விமானம், காலை 10.30 மணியளவில் அலோர் ஸ்டார், சுல்தான் அப்துல் ஹலீம் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

காலை 11.15 மணியளவில் கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் தற்காலிக நிவாரண மையமாக மாற்றப்பட்டுள்ள சுல்தான் அப்துல் ஹலீம் அரங்கத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் நேரில் சந்தித்து, நிலவரத்தை கேட்டறிந்தார்.

இதேபோன்று தற்காலிக நிவாரண மையமாக மாற்றப்பட்டுள்ளஅலோர் ஸ்டார் , திதி கஜா - தொடக்கப்பள்ளியில் அனுமதிக்கப்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பு மக்களையும் பிரதமர் நேரில் சென்று சந்தித்தார்

இதனிடைய கெடா மாநிலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கட்டமைப்புகளை சீர்படுத்துவதற்கு ஒரு கோடியே 30 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்வதாக பிரதமர் அறிவித்தார்..

பிரதமருடன் கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ பிசோல் சாலே , கெடா மாநில அம்னோ தொடர்புக்குழுத் தலைவர்டத்தோஸ்ரீ மஹ்ஜிர் காலிட் , கெடா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் கெடா மந்திரி பெசார்டத்தோஸ்ரீ அஹ்மத் பாஷா முஹமட் ஹனிபா ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →