கெடா, கோலக்கெட்டிலில் முதியவர் கண்ணன் சகாதேவன் என்பவரை கொலை செய்ததாக 3 இந்திய இளைஞர்கள் உட்பட நால்வார், பாலிங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று காலையில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
25 வயது தமிழ்ச்செல்வன் குமரன், 33 வயது விக்ரன் சந்திரசேகரன், 21 வயது சுரேஷ்குமார் சிவசுப்பிரமணியம் மற்றும் 33 வயது சரிம் பின் ஒமார் ஆகிய நான்கு இளைஞர்களும் மாஜிஸ்திரேட் நஜ்வா செ மாட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
இந்த நால்வரும் கடந்த அக்டோபர் முதல் தேதி பிற்பகல் 3 மணியளவில் எண். 170,லோரோங் பிடாரா 4, தாமான் டேசா பிடாரா, கோலகெட்டில், கெடா என்ற முகவரியில் உள்ள வீட்டில் தனியொரு நபராக வசித்து வந்த 71 வயதுடைய கண்ணன் சகாதேவனை மடக்கி தங்கச் சங்கிலி மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்தப் பின்னர் அவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 40 ஆண்டுகள் சிறை மற்றும் 12 பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் தமிழ்ச்செல்வன், விக்ரன், சுரேஷ்குமார் மற்றும் சரீம் ஆகிய நால்வரும் கொலை குற்றச்சாட்டை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
இவ்வழக்கில் அரசு தரப்பில் துணை பப்ளிக் பிராசிகியூட்டராக முஹமாட் இக்மால் அஃபான்டி சுல்கிஃப்லி ஆஜராகியுள்ளார். இந்த கொலை வழக்கு விசாரணை, அலோர் ஸ்டார் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால் அந்த நால்வரிடமும் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.








