பினாங்கு, நவ. 14-
பினாங்கு தண்ணீர்மலை, நாட்டுக்கோட்டை நகரத்தாரின் அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று காலையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
1854 ஆம் ஆண்டு நிறுவப்பட்டஅருள்மிகு தண்டாயுதபாணி ஆலயம், பினாங்கில் உள்ள இந்து மக்களிள் முக்கிய சமயச் சின்னமாக விளங்கி வருகிறது. இவ்வாலய மகாகும்பாபிஷேயத்தில் அதிகமானோர் கலந்து கொண்டு முருகன் பெருமானின் அருளைப் பெற்றனர்.

இந்த மகாகும்பாபிஷேகத்தையொட்டி, பினாங்கில் இந்து ஆலயங்களை நிர்வகித்து வரும் RSN ராயர் தலைமையிலான பினாங்கு இந்து அறப்பாணி வாரியப் பொறுப்பாளர்களுக்கும் நாட்டுக்கோட்டை நகரத்தார் அழைப்பு விடுத்து இருந்தனர்.
அந்த வகையில் பினாங்கு இந்து அறப்பணிவாரியம் சார்பில் அதன் துணைத் தலைவர் டாக்டர் ஆர். லிங்கேஸ்வரன், ஆணையர் சங்கர் ஆகியோர் ஆலயத்திற்கு பூஜைத்தட்டு ஏந்திய வந்து, நிகழ்விற்கு சிறப்பு சேர்த்தனர்.

அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்றார் டாக்டர் லிங்கேஸ்வரன்.
இவ்விழாவில் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைந்து மிக சிறப்பாக கும்பாபிஷேகத்தை நடத்திய நாட்டுக்கோட்டை நகரத்தாரின் அருள்மிகு தண்டாயுதபாணி ஆலய நிர்வாகத்திற்கு பினாங்கு அறப்பணி வாரியம் சார்பில் தமது நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டார்.

அனைவரையும் ஒன்றிணைத்து, அதே நேரத்தில் சமூகத்ததிற்கு சேவையாற்ற வாய்ப்பு கிடைத்தது குறித்து மகிழ்ச்சி அடைவதாக டாக்டர் லிங்கேஸ்வரன் பெருமிதம் தெரிவித்தார்.








