கோத்தா பாரு, டிசம்பர்.02-
காப்பரல் அந்தஸ்தில் உள்ள போலீஸ்காரர் ஒருவர், மளிகைக்கடையில் நுழைந்து கொள்ளையிட்டதாக கோத்தா பாரு, செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
44 வயது முகமட் இர்ஃபான் அஸியாடி அப்துல் அஸிஸ் என்ற அந்த போலீஸ்காரர், மளிகைக்கடை உதவியாளரான பாகிஸ்தான் பிரஜையை மடக்கி 400 ரிங்கிட்டை கொள்ளையிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அந்த போலீஸ்காரர், கடந்த நவம்பர் 8 ஆம் தேதி மாலை 6.20 மணியளவில் பெங்காலான் செப்பா, கம்போங் பெரிஸ் ஜம்புவில் உள்ள மளிகைக்கடையில் இக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றச்சாட்டில் கூறப்பட்டது.
இதே போன்று கடந்த நவம்பர் 10 ஆம் தேதி அந்த போலீஸ்காரர், மற்றொரு மளிகைக்கடையில் நுழைந்து பாகிஸ்தான் ஆடவரைப் பொருட்களைக் கொள்ளையிட்டதாக இரண்டாவது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.








