Jul 1, 2026
Thisaigal NewsYouTube
பந்திங்கில் 4,000 வேலைவாய்ப்புகளுடன் 'ஜாப்-கேர் சிலாங்கூர்' முகாம்
தற்போதைய செய்திகள்

பந்திங்கில் 4,000 வேலைவாய்ப்புகளுடன் 'ஜாப்-கேர் சிலாங்கூர்' முகாம்

Share:

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாபாராய்டு தலைமையில், நாளை ஏப்ரல் 11 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பந்திங் எம்.சி.எஸ் கல்லூரியில் பிரம்மாண்டமான ஜாப்-கேர் சிலாங்கூர்' வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இம்முகாமில் 4,000-க்கும் மேற்பட்ட காலியிட வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. குறைந்தபட்சச் சம்பளம் 1,700 ரிங்கிட் முதல் தொடங்குகிறது. தகுதியுள்ளவர்களுக்கு 3,000- ரிங்கிட்டுக்கும் அதிக ஊதியத்தில் 'ஜாப்-கேர் பிரீமியம்' வேலைகளும், நேர்முகத் தேர்வின் மூலம் அன்றைய தினமே பணி நியமனம் பெறும் வாய்ப்பும் உண்டு.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் கைதிகளுக்கும் இதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

வேலைவாய்ப்புடன் சுகாதாரப் பரிசோதனைகள், எஸ்.டி.ஆர், இ-காசே,ஜே.கே.எம் போன்ற உதவித்தொகை விண்ணப்பங்கள் மற்றும் எல்.எச்.டி.என், பெர்கேசோ, இ.பி.எஃப் போன்ற முக்கிய அரசு முகமைகளின் சேவைகளும் ஒரே இடத்தில் வழங்கப்படுகின்றன.

வேலை தேடுபவர்கள் தங்களின் ரெசுமே மற்றும் ஆவணங்களுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related News