Oct 18, 2026
Thisaigal NewsYouTube

உலகளாவிய அமைதி குறியீடு வரிசையில் மலேசியா 10 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
உலகளாவிய அமைதி குறியீடு வரிசையில் மலேசியா 10 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது

ஜோர்ஜ்டவுன், அக்டோபர் 07-

2024 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அமைதி குறியீடு வரிசையில் 163 நாடுகளில் மலேசியா 10 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக தேசிய ஒற்றுமைத்துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.


இந்த பட்டியலில் ஆசியா ரீதியில் சிங்கப்பூருக்கு அடுத்து 2 ஆவது இடத்தை மலேசியா பிடித்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
நேற்று இங்கு பினாங்கு வடகிழக்கு மாவட்ட அளவிலான ஒற்றுமை தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சி கலந்து கொண்டு அவர் பேசினார்.


இந்நாட்டின் அமைதிக்கு அனைத்து தரப்பினரின் பங்களிப்பு தான் காரணம் என்பதை இந்த குறியீடு காட்டுவதாக அவர் சொன்னார்.இந்த சாதனை நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய ஒன்று என அவர் குறிப்பிட்டார்.இந்நாட்டில் மதங்களுக்கிடையிலான அமைதி மட்டும் நல்லிணக்கத்தை வலுபெற செய்ய தேசிய ஒற்றுமை துறை அமைச்சு பல திட்டங்களை வகுத்து வருவதாக அவர் சொன்னார்.மலேசியர்களின் ஒற்றுமை ஒரு கலாச்சாரமாக இருக்க வேண்டும் என்பதே தேசிய ஒற்றுமை துறை அமைச்சின் இலக்கு என்றார் அவர்.


பல இடங்களை ச் சார்ந்த நாடு என்ற நிலையில் சமூக பற்றாக்குறை சவாலை நாடு எதிர்நோக்கி வருகிறது.இந்நாட்டில்,மதங்களுக்கிடையிலான அமைதி மட்டும் நல்லிணக்கத்தை வலுபெற செய்ய தேசிய ஒற்றுமை துறை அமைச்சு பல திட்டங்களை வகுத்து வருவதாக அவர் சொன்னார்.
மலேசியர்களின் ஒற்றுமை ஒரு கலாச்சாரமாக இருக்க வேண்டும் என்பதே தேசிய ஒற்றுமை துறை அமைச்சின் இலக்கு என்றார் அவர்.


பல இடங்களை ச் சார்ந்த நாடு என்ற நிலையில் சமூக பற்றாக்குறை சவாலை நாடு எதிர்நோக்கி வருகிறது.இதர மதங்களுக்கிடையே குறைந்த புரிந்துணர்வு மற்றும் கருத்து வேறுபாடு ஒரு முக்கிய சமூக பற்றாக்குறையாக இருந்து வருகிறது.


இந்த நிலையை கட்டுப்படுத்தாவிட்டால் தீ போல் பற்றிக்கொள்ளும் என அவர் நினைவுறுத்தினார்.
இருப்பினும் ருக்கூன் நெகாரா கோட்பாடுகளை நாம் கடைப்பிடித்து வருவதால் நாட்டில் அமைதி மற்றும் நிலைத்தன்மை வலிமையுடன் இருந்து வருவதாக அவர் தெரிவித்தார்
நாட்டின் அமைதி மட்டும் நல்லிணக்கத்திற்கு ஒற்றுமை தான் அடிதளம் என்பதை நமது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →