மனிதர்கள் இதுவரை பயணித்திராத தொலைவை எட்டிய ஆர்டெமிஸ்-2 குழுவினர் தங்களது 10 நாள் நிலவுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு பூமிக்குப் பாதுகாப்பாகத் திரும்பியுள்ளனர்.
அவர்கள் பயணித்த ஓரியான் விண்கலமானது, அமெரிக்க கிழக்கு நேரப்படி, வெள்ளிக்கிழமை இரவு சுமார் 8.07 மணியளவில், மலேசிய நேரப்படி காலை 8.07 மணியளவில் சான் டியாகோவுக்கு அருகே உள்ள கடல் பகுதியில் திட்டமிட்டபடி தரையிறங்கியது.
இந்த நிகழ்வானது ஸ்பிளாஷ்டவுன் என்று அழைக்கப்படுகிறது.
ஸ்பிளாஷ்டவுன் நிகழ்வு மூலம் கடலில் விழுந்த ஓரியன் விண்கலம், அமெரிக்க கடற்படை கப்பல் மூலம் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்படுகின்றது.
இதனிடையே, ஆர்டெமிஸ்-2 திட்டத்தின் கீழ் நிலவுக்குச் சென்று வந்த 4 விண்வெளி வீரர்களும் நலமாக இருப்பதாக நாசா உறுதிப்படுத்தியுள்ளது.








