Jun 29, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதித் திட்டம்? - புக்கிட் அமான் அதிரடி விசாரணை
தற்போதைய செய்திகள்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதித் திட்டம்? - புக்கிட் அமான் அதிரடி விசாரணை

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.27-

அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கும், நாட்டின் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதற்கும் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சதி முயற்சி குறித்து புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் முழு வீச்சில் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிக்கும் செயல்கள் நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டம் 124 B-ன் கீழ் தற்போது தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.

இந்த விசாரணை D5 பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.

இந்தச் சதித் திட்டத்தில் செல்வாக்கு மிக்க உள்ளூர் பிரமுகர் ஒருவர், அனைத்துலக ஊடக நிறுவனம் ஒன்றுடன் இணைந்து செயல்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அந்தப் பிரமுகரின் பெயரையோ அல்லது சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனத்தின் பெயரையோ ஐஜிபி வெளியிடவில்லை.

Related News

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்