நீதித்துறையின் சுதந்திரம் உட்பட அச்சட்டத்தை நிலைநிறுத்துவது மீதான தீர்மானம் குறித்து விவாதிக்கும் வகையில் மலேசிய வழக்கறிஞர் மன்றம் அவசர ஆண்டுக்கூட்டத்தை நடத்தவிருக்கிறது.
இப்படியொரு அவசரக்கூட்டம் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று 173 உறுப்பினர்கள் செய்த மனுவைத் தொடர்ந்து இந்த அவசரக்கூட்டம் நடத்தப்படுவதாக மலேசிய வழக்கறிஞர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வரும் மே 10 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு மசீச கட்டடத்தில் உள்ள சான் சூன் மண்டபத்தில் இக்கூட்டம் நடைபெறவிருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது. இந்த அவசர ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு 500 உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும். கூட்டம் நடைபெறும் அன்று கோரம் இல்லா விட்டால் அக்கூட்டம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

போலீஸ் படையின் முன்னாள் நம்பர் 2-க்கு யுடிஇஎம்மில் புதிய பொறுப்பு

2027 பட்ஜெட்டில் சம்பள உயர்வா? ரமணன் சூசகம்

விசா இல்லா வசதியை வேலைக்காக பயன்படுத்த வேண்டாம் – இந்தியப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை

25-வது மாடியிலிருந்து விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாக நாடகக் கலைஞர்கள் மீது விசாரணை


