Jan 10, 2026
Thisaigal NewsYouTube
மித்ரா - எஸ்பிஆர்எம் இணைந்து நடத்திய ஊழல் தடுப்பு விளக்கவுரை: புத்ராஜெயாவில் இந்திய சமூக அமைப்புகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
தற்போதைய செய்திகள்

மித்ரா - எஸ்பிஆர்எம் இணைந்து நடத்திய ஊழல் தடுப்பு விளக்கவுரை: புத்ராஜெயாவில் இந்திய சமூக அமைப்புகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

Share:

புத்ராஜெயா, ஜனவரி,10-

மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவான மித்ரா கீழ் நிதியுதவி பெறும் அமைப்புகள் மற்றும் நிறுவனங்களிடையே வெளிப்படைத்தன்மையையும், ஊழலற்ற நிர்வாகத்தையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இன்று சிறப்பு விளக்கவுரை கருத்தரங்கு நடைபெற்றது.

மித்ரா பணிக் குழுத் தலைவர் P. பிரபாகரன் தலைமையில் புத்ராஜெயாவில் உள்ள டேவான் டாமார் சாரியில் நடைபெற்ற இந்நிகழ்வு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் நேரடி ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வு, எஸ்பிஆர்எம் பொதுக் கல்விப் பிரிவு இயக்குநர் டத்தோ டிபிஜே அஹ்மாட் நிஸாம் இஸ்மாயில் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள், மித்ரா தரப்பில் அதன் முக்கியப் பொறுப்பாளர்கள் மற்றும் திட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு விளக்கவுரை நிகழ்த்தினர்.

நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றிய அஹ்மாட் நிஸாம், ஊழலை ஒழிப்பது என்பது ஒரு தனிப்பட்ட அமைப்பின் வேலை மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு என்பதை வலியுறுத்தினார்.

நேர்மை மற்றும் நற்பண்புகள் ஒருவருடைய குடும்பத்திலிருந்தே தொடங்க வேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

அதே வேளையில் தேசிய ஊழல் எதிர்ப்பு உத்திக்கு இணங்க, நிறுவனங்கள் மற்றும் NGO போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டிய அவசியத்தை அஹ்மாட் நிஸாம் தமது உரையில் வலியுறுத்தினார்.

Related News