Jul 21, 2026
Thisaigal NewsYouTube
ஜூன் வரை நெகிரி செம்பிலான் தொழில்முனைவோருக்கு தெக்குன் 36 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி
தற்போதைய செய்திகள்

ஜூன் வரை நெகிரி செம்பிலான் தொழில்முனைவோருக்கு தெக்குன் 36 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி

Share:

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இந்தாண்டு ஜூன் மாதம் வரை சுமார் 1,500 தொழில்முனைவோருக்கு தெக்குன் நேஷனல் நிறுவனம் 36 மில்லியன் ரிங்கிட் நிதியுதவியை வழங்கியுள்ளது என்று தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்துள்ளார். தேசிய அளவில் இதே காலகட்டத்தில் 25 ஆயிரத்து 600 பேருக்கு 540 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு லட்சம் ரிங்கிட் மற்றும் அதற்குக் குறைவான நிதியுதவிக்கான விண்ணப்பங்களுக்கு 7 நாட்கள் கால அவகாசத்திலும், 20 ஆயிரம் ரிங்கிட் வரையிலான மைக்ரோ நிதியுதவிகளுக்கு 24 மணி நேரத்திற்குள்ளும் முடிவு தெரியப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.

தெக்குன் கடனுதவி பெற எந்தவொரு அரசியல் தலைவரின் ஆதரவுக் கடிதமும் தேவையில்லை. இனம், மதம், அரசியல் சார்பின்றி தகுதியின் அடிப்படையில் மட்டுமே விண்ணப்பங்கள் நேர்மையாக பரிசீலிக்கப்படும் என்பதையும் அவர் விளக்கினார்.

தெக்குன் கீழ் இந்திய சமூகத்திற்கான 'ஸ்பூமி' திட்ட நிதி 30 மில்லியனிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் 'முத்ரா' (MUDRA) திட்டம் மூலம் இந்தாண்டு 220 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் அமைச்சர் ஸ்டீவன் சிம் சுட்டிக்காட்டினார்.

Related News