Dec 2, 2025
Thisaigal NewsYouTube
தம்பதியரைப் போலீஸ் தேடுகிறது
தற்போதைய செய்திகள்

தம்பதியரைப் போலீஸ் தேடுகிறது

Share:

தங்கள் வீட்டில் தங்கியிருந்த சக நண்பர் ஒருவர், வீட்டின் பின்புறம் உள்ள கழிவுத் தொட்டியில் பிணமாக கண்டுப்பிடிப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு தம்பதியரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நேற்றிரவு கோல கங்சாரில், 40 வயது மதிக்கத்தக்க ஓர் இந்தோனேசியரின் உடல் கழிவுத் தொட்டியிலிருந்து மீட்கப்பட்டது.

தடிப்பான பொருள் ஒன்றினால் தாக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படும் அந்த ஆடவரின் உடல், ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ள வேளையில், அந்நபரின் மரணத்திற்கு காரணமானவர்கள் என்று நம்பப்படும் அத்தம்பதியர் தேடப்பட்டு வருவதாக கோல கங்சார் மாவட்ட போலீஸ் தலைவர் ஓமர் பக்தியார் யாக்கோப்தெரிவித்தார்.

Related News