Dec 5, 2025
Thisaigal NewsYouTube
விதை நெல்லை மறைத்து வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் !
தற்போதைய செய்திகள்

விதை நெல்லை மறைத்து வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் !

Share:

விதை நெல்லை மறைத்து வைக்கும் விநியொகிப்பாளர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்மை, உணவு பாதுகாப்பு அமைச்சு எச்சரித்துள்ளது.

இந்த ஆண்டு அட்டவணைப்படி நெல் நடவு செய்ய அரசு முடிந்தவரை வழி வகை செய்யும் என்று அதன் அமைச்சர் முஹமாட் சாபு உறுதியளித்தார்.

நெல், விதை நெல் ஆகியவற்றுக்கான விலை குறித்து பின்னர் கலந்தாலோசிக்கப்படும். ஆனால், நெல் நடவு விரைவுப்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.

விதை நெல் மறைத்து வைக்கப்படுவது குறித்து ஏற்கெனவே 20 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு நடவடிக்கையும் எடுக்கப்பட்டு விட்டது என முஹமாட் சாபு கூறினார்.

Related News