Mar 23, 2026
Thisaigal NewsYouTube
சரவாக் மாநிலத்தில் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

சரவாக் மாநிலத்தில் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை

Share:

சரவாக் மாநிலத்தில் ரேபிஸ் நோயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது, ரேபிஸ் நோயானது பூனைகளின் மூலமும் பரவும் அபாயம் அதிகரித்திருப்பதால் அதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

மாநில சுகாதாரத் துறை மற்றும் கால்நடை சேவைத் துறையுடன் இணைந்து ஒருங்கிணைந்த செயல் திட்டம் உருவாக்க ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளதாக சரவாக் மாநில துணை முதல்வர் டாக்டர் சிம் குய் ஹியன் தெரிவித்துள்ளார்.

சரவாக் மாநிலத்தில் ரேபிஸ் நோய் தொடர்ந்து பெரிய அச்சுறுத்தலாகவே உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பதிவு செய்யப்பட்ட கடி மற்றும் கீறல் சம்பவங்களில் பெரும்பாலும் தெருநாய்களைத் தவிர்த்து, பூனைகள் தொடர்புடையதாக இருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்துவதில் தற்போது முக்கிய சவாலாக இருப்பது பூனைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதாகும் என்றும் சிம் குய் ஹியன் குறிப்பிட்டுள்ளார்.

Related News

பட்டாசு விபத்து:  பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

பட்டாசு விபத்து: பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு  - சுகாதார அமைச்சு தகவல்

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு - சுகாதார அமைச்சு தகவல்

புக்கிட் பிந்தாங் கட்டிடத்தில் தீ விபத்து: இரண்டு கடைகள் 70 விழுக்காடு சேதம்

புக்கிட் பிந்தாங் கட்டிடத்தில் தீ விபத்து: இரண்டு கடைகள் 70 விழுக்காடு சேதம்

மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழா / சீர்திருத்தங்களும் மக்கள் நல ஆட்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டது

மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழா / சீர்திருத்தங்களும் மக்கள் நல ஆட்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டது

இஸ்கண்டார் புத்ரி பகுதியில் ‘ஓப்பராசி சாம்செங் ஜாலானான்’ நடவடிக்கை – 32 சம்மன்கள் வழங்கப்பட்டன

இஸ்கண்டார் புத்ரி பகுதியில் ‘ஓப்பராசி சாம்செங் ஜாலானான்’ நடவடிக்கை – 32 சம்மன்கள் வழங்கப்பட்டன