Aug 5, 2026
Thisaigal NewsYouTube
லோரி ஓட்டுநர் பாராங்கினால் தாக்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

லோரி ஓட்டுநர் பாராங்கினால் தாக்கப்பட்டார்

Share:

அம்பாங், பண்டான் பெர்டானா வில் ஒரு வீட்டில் ஆடவர் ஒருவர் பாராங்கினால் கடுமையாக தாக்கப்பட்டார். லோரி ஓட்டுநரான 43 வயதுடைய அந்த நபர் பாராங்கினால் வெட்டுக் காயங்களுக்கு ஆளானது தொடர்பில் தகவல் பெற்ற 40 வயது மாது, பின்னர் இதுகுறித்து போலீசில் புகார் செய்துள்ளார்.

அந்த நபரின் மனைவி என்று நம்பப்படும் அந்த மாது கொடுத்த தகவலை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அம்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் அசாம் இஸ்மயில் தெரிவித்துள்ளார்.

கைகள், மார்பகம், முதுகு போன்ற இடங்களில் கடும் வெட்டுக்காயங்களுக்கு ஆளான அந்த லோரி ஓட்டுநர் அம்பாங் மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் குப்பைக்கூளங்களை சேகரிப்பாளரான 28 வயதுடைய நபரை போலீசார் கைது செய்து இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

இது பழைய பழிவாங்கல் நடவடிக்கையாக இருக்குமோ என்று சந்தேகிக்கப்படுவதாக ஏசிபி முகமட் அசாம் இஸ்மயில் தெரிவித்தார்.

Related News