Jan 20, 2026
Thisaigal NewsYouTube
டிஎபி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க அம்னோ இளைஞர் பிரிவுக்கு எந்த பிரச்னையும் இல்லை
தற்போதைய செய்திகள்

டிஎபி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க அம்னோ இளைஞர் பிரிவுக்கு எந்த பிரச்னையும் இல்லை

Share:

விரைவில் நடைபெற விருக்கும் 6 மாநிலங்களின் சட்ட மன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் டிஎபி கட்சிகளுக்கு வாக்களிப்பதற்கு அம்னோவின் ஆதரவாளர்களாக விளங்கும் இளையத் தலைமுறையினருக்கு எந்தவொரு பிரச்னையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

தற்போதைய இளம் தலைமுறையினர் ஆழமான அரசியல் அறிவு பெற்றுள்ள அதே வேளையில், முந்தைய தலைமுறையினரின் எதிர்மறை உணர்வுகளுக்கு இனி கட்டுப்படபோவதில்லை என்று அம்னோ இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் முகமட் ஹைரி மாட் ஷா குறிப்பிட்டார்.

வாக்களிப்பது ரகசியமானதாகும். எனவே, ஒற்றுமை அரசாங்கத்தை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்ட வேட்பாளர்களுக்கு இன்றைய தலைமுறையினர் வாக்களித்து நாடு மற்றும் நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கு பங்காற்றுவர் என்று எதிர்பார்க்கப்படுவதாக முகமட் ஹைரி மாட் ஷா கூறினார்.

Related News