Jun 29, 2026
Thisaigal NewsYouTube
கமாண்டர் நசாருடின் நாசீர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் 2 பேர் கைது
தற்போதைய செய்திகள்

கமாண்டர் நசாருடின் நாசீர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் 2 பேர் கைது

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.26-

புக்கிட் காயு ஹீத்தாமில் நேற்று மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையான ஏகேபிஎஸ் கமாண்டர் நடாருடின் நாசீர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதல் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நடந்த அடுத்த 24 மணி நேரத்திற்குள், அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ நைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக அவர்கள் இருவரிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று அதிகாலை 6.30 மணியளவில், முஹமட் நசாருசின் தனது தொழுகையை நிறைவேற்றக் காரில் சென்று கொண்டிருந்த வேளையில், மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர்.

இருப்பினும், அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்