Aug 12, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி பலி
தற்போதைய செய்திகள்

இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி பலி

Share:

கோத்தா திங்கி, மே.31-

ஜோகூர், கோத்தா திங்கியில் இரு வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்தார்.

இவ்விபத்து நேற்று இரவு 11 மணியளவில் ஜோகூர் பாரு-மெர்சிங் சாலையின் 37 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது. உள்ளூரைச் சேர்ந்த 31 வயது நபர் செலுத்திய புரோட்டோன் வீரா ரகக் கார், மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த 32 வயதுடைய நபரை, மோதித் தள்ளியதாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் யூசோப் ஒத்மான் தெரிவித்தார்.

இதில் கடும் காயங்களுக்கு ஆளான மோட்டார் சைக்கிளோட்டி, சம்பவ இடத்திலேயே மாண்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News