போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக மரணத் தண்டனை விதிக்கப்பட்ட கென்யா நாட்டைச் சேர்ந்த மாது, அத்தண்டனையிலிருந்து இன்று உயிர்தப்பினார்.
பமீலா பாயித் அஒகோ ஓமொல்லோ என்ற 39 வயதுடைய அந்த மாதுவின் தண்டனையை ரத்து செய்வதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நீதிபதி டத்தோஸ்ரீ கமாலுடின் எம்டி சைட் தமது தீர்ப்பில் தெரிவித்தார். எனினும் அந்த மாதுவிற்கு எதிரான குற்றச்சாட்டில் திருத்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை விதிப்பதாக நீதிபதி கமாலுதீன் எம்.டி சைட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம தேதி சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் 903.5 கிராம் போதைப்பொருளை கடத்தியதாக நான்கு பிள்ளைகளுக்கு தாயாரான பமீலா குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


