வரும் சனிக்கிழமை 6 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் முதல் முடிவு அன்றைய தினம் இரவு 8 மணிக்கு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தேர்தல் முடிவுகளை விரைந்து கிடைக்கும் வகையில் தேர்தல் நடைமுறைகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையமான எஸ்.பி.ஆர் கூறுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற 15 ஆவது பொதுத்தேர்தலைவிட இந்த ஆறு மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் விரைந்து கிடைக்கும் என்று தேர்தல் ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த ஜுலை 29 ஆம் தேதி நடைபெற்ற 6 மாநிலங்களுக்கான தேர்தல் வேட்புமனுத்தாக்கலின் போது 245 சட்டமன்றத் தொகுதிகளில் 572 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 181 தொகுதிகளில் நேரடிப்போட்டியும், 51 தொகுதிகளில் மும்முனைப்போட்டியும், 13 தொகுதிகளில் 4 முனைப் போட்டியும், ஒரு தொகுதியில் ஐந்து முனைப் போட்டியும் நடைபெறுகிறது என்று தேர்தல் ஆணைய்த தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கனி சலே தெரிவித்துள்ளார்.

Related News

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்


