Sep 25, 2026
Thisaigal NewsYouTube
காசா பயணத்தில் மலேசியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் - விசாரணை செய்யுமாறு புத்ராஜெயா வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

காசா பயணத்தில் மலேசியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் - விசாரணை செய்யுமாறு புத்ராஜெயா வலியுறுத்து

Share:

காசாவுக்கான மனிதநேயப் பயணத்தின் போது இஸ்ரேலியப் படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 28 மலேசியர்கள் மற்றும் பிற செயற்பாட்டாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாடுகளில் மலேசியர்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் உரிமைகள் தொடர்பில் அரசாங்கம் எந்தவித சமரசமும் செய்யாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் மற்றும் சட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட பல தரப்பினர் தற்போது சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை சேகரித்து வருவதாகவும் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

காசாவுக்கானகுளோபல் சுமூத் புளோட்டிலா 2.0 மனிதாபிமான பயணத்தின் போது இஸ்ரேல் படையினரால் கைது செய்யப்பட்ட 28 மலேசியர்கள் கடந்த திங்கட்கிழமை பாதுகாப்பாக நாட்டிற்கு திரும்பினர்.

என்றாலும், அவர்களில் பலர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related News