காஜாங், செப்டம்பர்.19-
காஜாங்கிலுள்ள பிரபல உணவகம் ஒன்றில் பரிமாறப்பட்ட சாத்தே வகை உணவு, பச்சை இறைச்சியாகவும், சோர்சில் புழுக்கள் இருந்ததாகவும் பெண் ஒருவர் வெளியிட்ட காணொளி, டிக் டாக்கில் பல பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இவ்விவகாரத்தில், டிக் டாக் பயனர்கள் பலர், அப்பெண்ணுக்கு ஆதரவாகப் பேசியிருந்தாலும் கூட, அந்த உணவகத்தின் மீது ஏன் அப்பெண் புகார் அளிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய அந்த உணவகம் மீது, உடனடியாக புகார் அளிக்கும் படியும் சிலர் அப்பெண்ணுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
அதே வேளையில், கடந்த சில மாதங்களாகவே அந்த உணவகத்தில் வழங்கப்படும் உணவுகளின் தரம் குறைந்து வருவதாகவும் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.








