ஜோகூர் பாரு, டிசம்பர்.17-
தீயணைப்புப் பணியின் போது, சிமெண்ட் துண்டு எகிறி விழுந்தததில் தீயணைப்பு வீரர் ஒருவர் காயமுற்றார். இந்தச் சம்பவம் இன்று காலை 7.21 மணியளவில் ஜோகூர், தாமான் ஜோகூர் ஜெயாவில் நிகழ்ந்தது.
நடுத்தர தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீச் சம்பவத்தில் மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்து தாக்கிய சிமெண்ட் துண்டினால் 23 வயது தீயணைப்பு வீரரின் வலது தோள்பட்டையில் காயமுற்றதாக ஜோகூர் ஜெயா தீயணைப்பு நிலையத்தின் செயலாக்க அதிகாரி முகமட் சால்லே தெரிவித்தார்.








