Sep 19, 2026
Thisaigal NewsYouTube
800 கிலோவாட்டாக உயர்த்தப்பட்ட மின்சார மானிய வரம்பு: கூடுதலாக 10 லட்சம் பேருக்கு பயன்
தற்போதைய செய்திகள்

800 கிலோவாட்டாக உயர்த்தப்பட்ட மின்சார மானிய வரம்பு: கூடுதலாக 10 லட்சம் பேருக்கு பயன்

Share:

தீபகற்ப மலேசியாவில் மாதத்திற்கு 800 கிலோவாட் மணிக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு பயனாளர்களுக்கு அதிக மின் கட்டணத்திலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என டிஎன்பி எனப்படும் தெனாகா நேஷனல் பெர்ஹாட் தெரிவித்துள்ளது.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிட்ட அறிவிப்பின் படி, இந்தச் சலுகையானது வரும் டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி வரையில் அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், தீபகற்ப மலேசியாவில் உள்ள வீட்டு மின் பயனாளர்களில் சுமார் 90 விழுக்காட்டினர், அதாவது 80 லட்சத்துக்கும் மேற்பட்டோர், பயனடைவார்கள் என டிஎன்பி தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஷாம்சுல் அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு மாதத்திற்கு 600 கிலோவாட் மணி என்ற வரம்பு இருந்த நிலையில், தற்போது அச்சலுகையானது 800 கிலோவாட் மணி ஆக உயர்த்தப்பட்டுள்ளதால், கூடுதலாக சுமார் 10 லட்சம் வீட்டு பயனாளர்கள் அதிக மின்சாரக் கட்டணத்திலிருந்து பாதுகாக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News