Sep 19, 2026
Thisaigal NewsYouTube
கணக்கெடுக்க வந்த டிஎன்பி ஊழியர் மீது தாக்குதல் - இருவர் கைது
தற்போதைய செய்திகள்

கணக்கெடுக்க வந்த டிஎன்பி ஊழியர் மீது தாக்குதல் - இருவர் கைது

Share:

செராஸ் பகுதியில் மின்சார மீட்டர் கணக்கெடுப்பதற்காக வந்த டிஎன்பி ஊழியர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அவரது பல் ஒன்று உடைந்ததுடன் தலை, முகம் மற்றும் கைகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

நேற்று நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக 28 மற்றும் 35 வயதுடைய இரு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் நாஸ்ரோன் அப்துல் யுசோஃப் வெளியிட்டுள்ள தகவலில், மின்சார மீட்டர் கணக்கெடுப்பிற்காக வந்த சக ஊழியரைப் பார்த்து அவரது பெயரை கூறி அழைத்த போது, அங்கிருந்த இருவருக்கும், ஊழியருக்கும் இடையே தவறான புரிதல் ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து தகராறு ஏற்பட்டு தாக்குதல் நடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட இருவரும் ஏற்கனவே குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் பதிவுகளைக் கொண்டவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில், பாதிக்கப்பட்டவரைத் தாக்க பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு பொருளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Related News