ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.19-
ஜோகூர் பாரு மாநகர் மன்றத்திற்குச் சொந்தமான வாகன இழுவை லோரிக்கு தீ வைத்ததாக ஆடவர் ஒருவர் ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
31 வயதுடைய வான் நஸ்ருல் டபல்யு அஹ்மாட் என்ற வேலையற்ற நபர், தனக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதுடன் மன்னிப்புக் கோரினார்.
கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலை 11.07 மணியளவில் ஜோகூர் பாரு, ஜேபி வாட்டர்ஃபிராண்ட் வாகன சேமிப்புக் கிடங்கில் அந்த நபர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சுமார் 24 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள மாநகர் மன்றத்திற்குச் சொந்தமான வாகனத்திற்குத் தீ வைத்து நாச வேலையில் ஈடுபட்டதாக அந்த ஆடவர் குற்றஞ்சாட்டப்பட்டார்.
14 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நபருக்கு எதிரான தீர்ப்பை நீதிமன்றம் நாளை புதன்கிழமை விதிக்கவிருக்கிறது.








