துவாரான், செப்டம்பர்.06-
கோத்தா கினபாலுவில் மாரா திறன் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் ஐவர் உயிரிழந்த கோர விபத்துக்குக் காரணம், அவர்கள் பயணித்தக் கார், வேகக் கட்டுப்பாட்டை இழந்துள்ளது என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சபா, துவாரான், ஜாலான் காயாங்-துவாரான் சாலையில் நேற்று வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இந்தக் கோர விபத்து மக்களிடையே பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ள வேளையில் அவர்கள் பயணித்த டொயோட்டா விஷ் கார், எதிர்த்திசையில் வந்த டிரெய்லர் லோரியுடன் மோதியுள்ளது என்று துவாரான் மாவட்ட போலீஸ் தலைவர் நோராய்டா அக் மைடின் தெரிவித்துள்ளார்.








