Dec 4, 2025
Thisaigal NewsYouTube
புத்ராஜெயாவில் நாளை வானம் தெளிவாக இருக்கும்
தற்போதைய செய்திகள்

புத்ராஜெயாவில் நாளை வானம் தெளிவாக இருக்கும்

Share:

புத்ராஜெயா, ஆகஸ்ட்.30-

நாட்டின் 68 ஆவது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் புத்ராஜெயாவில் நாளை காலை வானிலை தெளிவாக இருக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியா ஆருடம் கூறியுள்ளது.

காலை, மாலை மற்றும் இரவில் மழை இன்றி வானிலை நன்றாக இருக்கும் என்று அத்துறை தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தது.

புத்ராஜெயா இவ்வாண்டு மீண்டும் தேசிய தினக் கொண்டாட்டங்களை ஏற்று நடத்துகிறது. இந்நிகழ்வுக்கு 5 லட்சத்திற்கும் அதிகமானோர் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர், சபா மற்றும் லாபுவான் கூட்டரசு பிரதேசம் ஆகிய ஒன்பது மாநிலங்களிலும் காலையில் மழை பெய்யும் என்று அத்துறை கணித்துள்ளது.

Related News