கடந்த செவ்வாய்க்கிழமை கோலா லங்காட், சுங்கை ஜாரோம் என்ற இடத்தில் பட்ஜெட் ஹோட்டல் ஒன்றில் பாராங் முனையில் கொள்ளையடித்த கேங் ஸ்டோல்வான் கொள்ளைக்கும்பலைச் சேர்ந்த இருவரை போலீசார் வளைத்துப்பிடித்துள்ளனர்.
30 வயது மதிக்கத்தக்க அந்த இரண்டு சந்தேகப்பேர்வழிகளும் கடந்த வாரம் வியாழக்கிழமை 2.30 மணியளவில் கிள்ளான் வட்டாரத்தில் கைது செய்யப்பட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் அமாட் ரிட்வான் முகமட் நூர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் நிகழும் போது அந்த ஹோட்டலின் 19 வயது பணியாளர் செய்த போலீஸ் புகார் அடிப்படையில் அவ்விரு நபர்களும் பிடிபட்டனர். சம்பந்தப்பட்ட ஆடவர்களிடமிருந்து இரண்டு கைப்பேசிகள், கணையுடன் கூடிய ஒரு பாராங் கத்தி மற்றும் இதரப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமாட் ரிட்வான் குறிப்பிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


