Oct 6, 2026
Thisaigal NewsYouTube

11 வயது மாணவி காணாமல் போனதாக பரபரப்பு – கோபத்தில் உருவாக்கப்பட்ட பொய்த் தகவல் அம்பலம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
11 வயது மாணவி காணாமல் போனதாக பரபரப்பு – கோபத்தில் உருவாக்கப்பட்ட பொய்த் தகவல் அம்பலம்

கூலிம் லாபு பெசார் தேசியப் பள்ளியைச் சேர்ந்த 11 வயது மாணவி ஒருவர், அடையாளம் தெரியாத ஆடவருடன் மோட்டார் சைக்கிளில் பள்ளியை விட்டு வெளியேறியதாகப் பரவிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது பொய்யான தகவல் என்பது போலீஸ் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவி, காலை ஒன்றுகூடலில் கலந்து கொண்டுள்ளார். பின்னர் சக மாணவியுடன் ஏற்பட்ட சிறிய தகராறைத் தொடர்ந்து, தலையணியைச் சரிசெய்வதற்காகக் கழிவறைக்குச் சென்ற அவர், வகுப்பறைக்குத் திரும்பாமல் அங்கேயே இருந்துள்ளார்.

மாணவி வகுப்பில் இல்லாததை அறிந்த மற்றொரு மாணவி, அவர் அடையாளம் தெரியாத ஆடவருடன் மோட்டார் சைக்கிளில் பள்ளியை விட்டு வெளியேறியதாகத் தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், போலீஸ் துறை நடத்திய விசாரணையில் அந்தத் தகவல் உண்மைக்குப் புறம்பானது என்பது தெரிய வந்தது.

சம்பந்தப்பட்ட மாணவி மீது ஏற்பட்ட கோபத்தின் காரணமாகவே இந்தக் கதையை உருவாக்கியதாக தகவல் தெரிவித்த மாணவி ஒப்புக் கொண்டுள்ளார். கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்ட் சம்சுல் பின் சின்ரிங், 11 வயது மாணவி பள்ளியை விட்டு வெளியேறவில்லை என்றும், பள்ளி கழிவறையிலேயே இருந்ததாகவும் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →