வரும் சனிக்கிழமை, அலோர் ஸ்டாரில் நடைபெற விருக்கும், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி மலேசியா ஹரி ராயா பொது உபசரிப்பில், கலந்துகொள்வதிலிருந்து தவறவிட்டு விட வேண்டாம் என்று பாஸ் கட்சியின் கெடா மாநில தலைவர்களை, மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவர் மஹ்ஃபூஸ் ஒமார் கேட்டுக்கொண்டார்.
ரையா ஹோட்டலில் நடைபெறவிருக்கும் இந்தப் பொது உபசரிப்பில், பிரதமருடன், அமைச்சரவை உறுப்பினர்களும் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
இந்நிலையில், அவர்களின் வருகையை ஏற்றுக்கொண்டு இந்த அரிய நிகழ்வில், பாஸ் கட்சியின் கெடா மாநிலத் தலைவர்களும் கலந்துகொண்டு சிறப்புச் சேர்க்க வேண்டும் என்று அமானா கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற கொறடாவான மஹ்ஃபூஸ் ஒமார் வலியுறுத்தினார்.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்


