Oct 2, 2026
Thisaigal NewsYouTube

ஜோகூர் பாரு–சிங்கப்பூர் ஆர்டிஎஸ் ரயில் சேவை பிப்ரவரி 2027-ல் தொடக்கம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜோகூர் பாரு–சிங்கப்பூர் ஆர்டிஎஸ் ரயில் சேவை பிப்ரவரி 2027-ல் தொடக்கம்

ஜோகூர் பாரு–சிங்கப்பூர் விரைவு போக்குவரத்து அமைப்பான ஆர்டிஎஸ் லிங்க் ரயில் சேவை, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியப் போக்குவரத்து அமைச்சும் சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்டிஎஸ் இயக்க நிறுவனமான ஆர்டிஎஸ் ஓபரேஷன்ஸ் பிரைவெட் லிமிட்டேட் , இறுதிக்கட்ட பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் இறுதி அமைப்பு சோதனைகள் மற்றும் சோதனை ஓட்டங்களை முடிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சுயேட்சை பாதுகாப்பு மதிப்பீட்டாளரிடமிருந்து பாதுகாப்புச் சான்றிதழ் பெறப்படுவதுடன், இரு நாடுகளின் இறுதி ஒழுங்குமுறை அனுமதிகளும் கிடைத்த பின்னரே பயணிகள் சேவை தொடங்கும்.

மலேசியா மற்றும் சிங்கப்பூரில் ஆர்டிஎஸ் திட்டத்தின் உள்கட்டமைப்புப் பணிகள் பெருமளவில் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →