Dec 4, 2025
Thisaigal NewsYouTube
35 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்பு - நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர் வீரப்பன் வழங்கினார்
தற்போதைய செய்திகள்

35 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்பு - நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர் வீரப்பன் வழங்கினார்

Share:

நேற்று பூலாவ் செபாங் மைடின் பேரங்காடியில் நடைபெற்ற வண்ணமயமான தீபாவளி எனும் நிகழ்ச்சியில் ரெப்பா சட்டமன்ற உறுப்பினரும் நெகிரி செம்பிலான் மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினருமான வீரப்பன் சுப்பிரமணியம் கலந்துக் கொண்டு 35 பி40 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்பு வழங்கினர்.

நேற்று காலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை பரிவுமிக்க மலேசிய இந்தியர் எனும் அரசுசாரா அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

மேலும், சிறுவர்களுக்காக நடைபெற்ற வண்ணம் தீட்டும் போட்டி, பெரியவர்களுக்காக நடத்தப்பட்ட சேலை அழகு ராணி போட்டி, கோலம் போடும் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கும் கலந்துக் கொண்ட அனைவருக்கும் பரிசுகளையும் அன்பளிப்பையும் வழங்கினர்.

நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய சிறப்புரையில், வருகையாளர்களுக்கு தமது நன்றியினை தெரிவித்துக் கொண்டதோடு தம்மை நிகழ்ச்சி அழைத்த ஏற்பாட்டுக் குழுவுக்கும் மையிடின் பேரங்காடி நிறுவனத்திற்கும் தமது நன்றியினை தெரிவித்துக் கொண்டார் வீரப்பன்.

மேலும் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் மக்கள் நலன் திட்டங்கள் குறித்தும் தமதுரையில் வீரப்பன் விளக்கமாகப் பேசினார்.

அறியாமை எனும் இருளைப் போக்கி வெற்றியையும் வளர்ச்சியையும் இந்த தீபாவளி திருநாள் கொண்டு வர வேண்டும் எனக் கூறிய வீரப்பன். வந்திருந்த அனைவருக்கும் தமது தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

Related News