Dec 2, 2025
Thisaigal NewsYouTube
குறைந்த பட்சம் இளங்கலை பட்டம் இருக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

குறைந்த பட்சம் இளங்கலை பட்டம் இருக்க வேண்டும்

Share:

கூட்டரசு சட்டப்பூர்வ அமைப்பில் உள்ள இயக்குநர்கள் குழுவில் ஓர் உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு, ஒரு தனிநபர் குறைந்தபட்சம் இளங்கலைப் பட்டம் அல்லது அதற்கு இணையான கல்வி மற்றும் தொழில்முறைத் தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று அரசாங்கம் கோரியுள்ளது.

இந்த நியமனமானது நடைமுறையில் இருக்கும் எந்த விதிமுறைகளுக்கும் முரண்படாது என்பதை எப்போதும் உறுதிசெய்ய வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

பிற நிபந்தனைகளில், தனிநபர் தொழில்துறையியல் அல்லது கணக்கியல், நிதி அல்லது சட்டம் போன்ற தொடர்புடைய துறைகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்றும் வணிகம், நிதி, கணக்கியல், சட்டம், சந்தைப்படுத்தல், மேலாண்மை, நிறுவனம் அல்லது தொழில்துறை தொடர்புடைய துறைகளில் உள்ள பிற குறிப்பிட்ட திறன்கள் போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றிருப்பது இதில் அடங்கும் பிரதமர் அன்வார் மேலும் விளக்கினார்.

Related News