மகாதீருடனான கூட்டணி விவகாரத்தில் ஜசெக மிகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்ததாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
மகாதீர் மாறி இருப்பார் எனவும் அவர் மாற்றத்தைக் கொண்டு வருவார் எனும் நம்பிக்கையில் மட்டுமே ஜசெக அவருடன் கூட்டணி அமைத்தது. முந்தையப் பிரதமர் நஜிப்பை வீழ்த்துவது மட்டுமே ஜசெகவின் நோக்கம் கிடையாது எனத் தெரிவித்தார் அந்தோணி லோக்.
2018 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டக் கூட்டணி என்பது மாற்றத்தைக் கொண்டு வரவும் நாட்டை மேம்படுத்தவும் மகாதீருக்குக் கிடைத்த 2வது வாய்ப்பாகும் என மகாதீருடனான ஜசெகவின் கூட்டை குறித்து அந்தோணி லோக் விளக்கமளிக்கையில் இவ்வாறு கூறினார்.








