ஜோகூர் மாநிலத் தேர்தலை நடத்துவது குறித்து விவாதிப்பதற்கான சிறப்புக் கூட்டத்தை வரும் ஜூன் 12-ஆம் தேதி நடத்தவுள்ளதாகத் தேர்தல் ஆணையமான எஸ்பிஆர் அறிவித்துள்ளது.
ஜோகூர் சட்டமன்றம் கலைக்கப்பட்டது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, சட்டமன்ற சபாநாயகர் புவாட் ஜர்காஷியிடமிருந்து கிடைத்துள்ளதாகத் தேர்தல் ஆணையச் செயலாளர் கைருல் ஷஹ்ரில் இத்ருஸ் தெரிவித்துள்ளார். மாநில அரசமைப்புச் சட்டப்படி, சட்டமன்றம் கலைக்கப்பட்ட 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
தேர்தல் ஆணையத் தலைவர் ராம்லான் ஹாரூன் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், வேட்புமனுத் தாக்கல் மற்றும் வாக்குப்பதிவுக்கான முக்கியத் தேதிகள் குறித்து விவாதிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கைருல் தெரிவித்தார்.
கடந்த ஜூன் 1-ஆம் தேதி ஜோகூர் சட்டமன்றம் கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.








