Sep 25, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் சட்டமன்றக் கலைப்புக்கு ஒப்புதல் இல்லை: டான் ஸ்ரீ ராய்ஸ் யாதிம் அதிரடி வாதம்
தற்போதைய செய்திகள்

நெகிரி செம்பிலான் சட்டமன்றக் கலைப்புக்கு ஒப்புதல் இல்லை: டான் ஸ்ரீ ராய்ஸ் யாதிம் அதிரடி வாதம்

Share:

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதற்கு, மாநிலத்தின் ‘உண்டாங் லுவாக் யாங் எம்பாட்’ எனப்படும் நான்கு பாரம்பரியத் தலைவர்களின் அதிகாரப்பூர்வப் சம்மதம் பெறப்படவில்லை என மாநிலப் பாரம்பரிய மற்றும் கலாச்சாரப் பிரமுகர்டான் ஸ்ரீ ராய்ஸ் யாதிம் சட்டப்பூர்வக் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

நெகிரி செம்பிலானின் முன்னாள் மந்திரி பெசாரும், முன்னாள் அமைச்சரும், சட்ட நிபுணருமான ராயிஸ் யாத்திமின் இந்த வாதம், மாநில அரசியலமைப்புச் சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளர்துவாங்கு முஹ்ரிஸ்ஸின் ஒப்புதலோடு, 1959-ஆம் ஆண்டு மாநில அரசியலமைப்புச் சட்டப்படியே சட்டமன்றம் கலைக்கப்பட்டதாக முதலமைச்சர் டத்தோஸ்ரீ அமினுடின் ஹாரூன் அறிவித்திருந்த வேளையில், அதற்கு உண்டாங்குகளின் அங்கீகாரம் பெறப்படவில்லை என ராய்ஸ் யாதிம் தற்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Related News