Jun 5, 2026
Thisaigal NewsYouTube
பிரிக்பீல்ட்ஸ் உணவகத்தில் பெண்ணிற்கு ஆபாச சைகை:  வெளிநாட்டவர் கைது
தற்போதைய செய்திகள்

பிரிக்பீல்ட்ஸ் உணவகத்தில் பெண்ணிற்கு ஆபாச சைகை: வெளிநாட்டவர் கைது

Share:

கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸில் உள்ள உணவகம் ஒன்றில் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட 33 வயது வெளிநாட்டு ஆடவர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை இரவு, ஜாலான் துன் சம்பந்தனில் உள்ள உணவகத்தில் 31 வயது பெண் ஒருவரைப் பார்த்து இந்த நபர் ஆபாச சைகை செய்ததோடு, போதையில் அநாகரிகமாகவும் நடந்து கொண்டுள்ளார். இதனால் அச்சமடைந்த அப்பெண் மறுநாள் போலீசில் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வெளிநாட்டவரைப் பிரிக்பீல்ட்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் போலீசார் கைது செய்து, நான்கு நாட்கள் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். கைதான நபர் முறையான ஆவணங்களின்றி மலேசியாவிற்குள் நுழைந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஹூ சாங் ஹூக் தெரிவித்தார்.

Related News