Sep 25, 2026
Thisaigal NewsYouTube
விற்பனையாளரிடம் 10,000 ரிங்கிட் பறித்த 4 போலீசார் மீது  குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

விற்பனையாளரிடம் 10,000 ரிங்கிட் பறித்த 4 போலீசார் மீது குற்றச்சாட்டு

Share:

விற்பனையாளர் ஒருவரிடம் இருந்து பத்தாயிரம் ரிங்கிட் பணம் பறித்த குற்றச்சாட்டை, நான்கு போலீசார் இன்று நீதிமன்றத்தில் மறுத்து விசாரணை கோரியுள்ளனர்.

முகம்மது அல் ஹஃபீஸ், முகம்மது அஸ்மி, முகம்மது அஸ்லான் மற்றும் முஹம்மது ஹனிஃப் ஆகிய அந்த நான்கு போலீசாரும், கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் செந்துலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரு விற்பனையாளரை மிரட்டி இப்பணத்தைப் பறித்ததாகக் கூட்டுக்குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது பிரம்படி விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் நான்கு போலீஸ்காரர்களும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News